Monday, 5 April 2021

சமுதாய நாற்று பண்ணை

சமுதாய நாற்று பண்ணை

பூமி வெப்பம் அதிகரித்து வருகிறது. தண்ணீர் பஞ்சம் அதிகரிக்கிறது. விவசாய வேலைகள் குறைந்து வருகிறது. கிராமத்தில் வேலை வாய்ப்பின்றி மக்கள் நகரங்களில் குடியேறுவது அதிகரிக்கறிக்கிறது.

ஒரே சமயத்தில் கிராமங்களை பசுமையாக்கவும் மக்களுக்கு வேலை வாய்ப்பும் ஒரே செயலில் கொண்டு வர ட்ரீபுராசன் நிறுவனம் அறிமுகபடுத்தும் திட்டம் "சமுதாய நாற்று பண்ணை" திட்டமாகும்.

இதன் மூலம் கிராமங்களில் மரக் கன்றுகளை வளர்த்து அதன் மூலம் வருமானமும் பசுமையையும் ஒருங்கே கூட்ட நமது நிறுவனம் வாய்ப்பை ஏற்படுத்தி வருகிறது. 

மூலிகை செடிகள், மர வேலைக்கான மர வகைகள் , பழ மர வகைகள், அலங்கார மர வகைகள், காய்கறி செடி வகைகள் தேவையான நாற்றுக்களை வளர்க்க கிராமத்தில் விருப்பம் உள்ள அனைவருக்கும் பண்ணை அமைக்க பயிற்சி அளித்து கிராமங்களிலும் பல தொழில் முனைவோர்களை உருவாக்கி கிராம பொருளாதாரத்தையும் தேச பொருளாதாரத்தையும் உயர்த்த ஒரு பசுமை வழி.




நகரங்களில் மக்கள் நெருக்கம் அதிகமாகி நோய் தொற்றுகள் அதிகம் பரவும் வரும் இந்த வேளையில் கிராமங்களுக்கு மக்கள் திரும்ப வேண்டிய சூழ்நிலையில்  ட்ரீபுராசன் இந்த திட்டத்தினை பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் என்ற தொண்டு நிறுவனம் மூலம் கண்டறியப்பட்ட கிராமங்களில் நடைமுறைபடுத்த முயன்று வருகிறது. 


இந்தியாவின் காடுகளின் அடர்த்தி மிகவும் குறைந்த வரும் வேளையில் மக்கள் முன்னின்று தங்கள் வளத்தினையும் காடுகளின் வளத்தினையும் பெருக்க மிக நல்ல வாய்ப்பு.

இதனை தொழிலாய் தொடங்க விருப்பமுள்ளவர்களுக்கு திட்ட அறிக்கை தயாரிக்கவும் வங்கிகளில் முதலீடுகளுக்காக கடனுதவி பெற்று தொழில் தொடங்கவும், கன்றுகளை பல ஊர்களில் விற்பனை செய்ய தளங்களையும் நமது நிறுவனம் உருவாக்கி பல தொழில் முனைவர்களை உருவாக துணை புரிகிறது.

இதன் முதல் கட்டமாக தமிழ்நாட்டில் தொழில் வளத்தில் பின் தங்கியுள்ள சில மாவட்டங்களான திருவண்ணாமலை, தருமபுரி , கிருஷ்ண கிரி, விழுப்புரம் மாவட்டங்களில் இந்த வாய்ப்பினை வழங்கி வருகிறது.



Treepurasun, a complete organisation under the sun

No comments:

Post a Comment

TREE PURA SUN - an Introduction

त्रि पूरा सन                               ட்ரி பூரா சன்   TREEPURASUN  is the combination of three words TREE , PURA  and  SUN ....