கிராம தொழில் முனைவர்
சென்னை நகரத்தில் மாதம் ₹20,000/- சம்பாதிப்பதும் ஒரு கிராமத்தில் ₹5,000/- சம்பாதிப்பதும் ஒன்று தான்.
கரோனா கிருமி இயற்கையாக வந்ததா அல்லது செயற்கையாக உருவாக்கப்பட்டதா என்ற விவாதம் ஒரு பக்கம் போய் கொண்டிருந்தாலும் , இந்த நோய் தொற்றால் விளைந்த நன்மை அதிக மாசு இல்லாத கிராம வாழ்க்கையை பல மக்கள் விரும்ப ஆரம்பித்துவிட்டனர்.
நகர வாழ்க்கை இட நெருக்கடியாலும் , வாழ்க்கை முறையாலும், தூசு மாசாலும், தரமில்லாத உணவாலும் உடல் நிலை பாதிக்கப்பட்டு நகரம் நரகமாகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் அரசாங்கங்களும் நகர இட நெருக்கடியை குறைக்க மக்கள் அவரவர் கிராமங்களில் மீண்டும் குடியமற கிராமங்களிலும் வருமான வாய்ப்புகளை அதிகரிக்கும் திட்டங்களை நடைமுறைப்படுத்த வேண்டும்.
இதன் பொருட்டே சமுதாய பொறுப்புணர்ச்சியுடன் நமது ட்ரீபூராசன் நிறுவனம் கிராம தொழில் முனைவர், விவசாய தொழில் முனைவர் ஆகிய நிகழ்ச்சிகள் மற்றும் பயிற்சிகளை நடத்துகிறோம்.
பொறுப்புள்ள குடிமக்கள் இயக்கம் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல் களத்தின் மூலம் கிராமங்களை தேர்வு செய்து இந்த நிகழ்ச்சிகளை நடத்துகிறோம்.
கிராமங்கள் நம் முன்னோர் காலத்தில் இருந்தது போல் இப்பொழுது தன்னிறைவாக இல்லை. இன்றும் பல கிராமங்கள் தனது அன்றாட தேவையான காய்கறிகளை கூட உற்பத்தி செய்யாமல் வெளியிலிருந்து வாங்கும் சூழ்நிலையே இருக்கிறது. பல் வேறு பொருட்கள் நகரங்களிலிருந்து கூட கிராமங்களுக்கு வருகின்றன.
இதன் பொருட்டு ட்ரிபூராசன் பல கிராமத்தினருடன் பேசி அந்தந்த கிராமங்களின் தேவைகேற்ப இளைஞர்களை தொழில் தொடங்க ஊக்குவித்து அவர்களின் வருமானத்தை பெருக்க ஆலோசனை வழங்குகிறது.
இது போன்ற நிகழ்வுகளில் திருவண்ணாமலை மாவட்டத்தின் தெற்கு கோடியில் இருக்கும் மேல்பாச்சார் கிராமத்தில் திரு. பெருமாள் என்ற சுறுசுறுப்பான இளைஞரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. இயந்திர பொறியியல் துறையில் டிப்ளமோ பெற்று மூன்று வருடங்களாக சென்னையில் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தவர் பெருந்தொற்று ஊரடங்கினால் கிராமத்தில் வந்து பெற்றோர்களை பார்த்துக் கொள்ள வேண்டிய சூழலில் இருந்தார்.
திரு. பெருமாளின் பலம் மற்றும் அவரின் சவால்களை உணர்ந்து திரு. கிருஷ்ணகுமார் அவரை எல்.இ.டி பல்புகள் தயாரிப்பில் ஈடுபட யோசனை வழங்கினார். ட்ரிபூராசன் அவருக்கு இது குறித்து இணைய தளத்தின் மூலமே (ஊரடங்கினால் ) பயிற்சிக்கு வழிக் காட்டியது.
இந்த தொழில் பற்றி பலரிடமும் விசாரித்து அறிந்து தன்னம்பிக்கை வந்தபின் திரு. பெருமாள் எல்.இ.டி பல்புகள், டூயுபுகள் தயாரிக்க ஆரம்பித்துவிட்டார். அவர் வரும் காலங்களில் தன் உழைப்பினாலும் விடா முயற்சியாலும் தன் தொழிலில் முன்னேறுவார் என்று நாங்கள் நம்புகிறோம். அவர வளர்ச்சியினால் அவரால் கிராமத்தில் சிலருக்கும் வேலை வாய்ப்பு உருவாக்கி தர முடியும்.
இந்த முயற்சியினால் பெருமாள் தனக்கும் தன் குடும்பத்திற்காகமல்லாது பெரு நகரங்களின் சுமையையும் குறைக்க போகிறார்.
தென் திருவண்ணாமலை மாவட்ட கிராமத்தவர்களும் அடுத்த மாவட்டமான தருமபுரி மாவட்டத்தை சேர்ந்தவர்களும் இந்த இளைஞரிடம் தரமான பல்புகளை சரியான விலையில் வாங்கி நீங்களும் திருப்தி அடைந்துஇவரை ஆதரிப்பது ஒரு சமுதாய மாற்றத்திற்கான சேவையாகவே ட்ரீபூராசன் பார்க்கிறது.
இவரை தொடர்பு கொள்ள:
இது போல் கிராமங்களில் விவசாய செய்தும் போதுமான வருமானம் இல்லாமல் கஷ்டபடுபவர்களும் தங்களது விவசாய உற்பத்தி செய்யும் பயிர்களை பயிராகவே விற்காமல் அந்த பொருளின் மதிப்பினை கூட்டி விவசாயி கடின உழைப்பிற்கு ஏற்ற பலனை பெற விவசாய தொழில் முனைவோர் ஆக வேண்டும் என்று ட்ரீபூராசன் நிறுவனம் பயிற்சிகள் வழங்குகிறது.
எடுத்துக்காட்டாக இந்த 2021ல் கிராமங்களில் விளையும் குச்சி / ஆள்வெள்ளி கிழங்கு விவசாயிகளால் தரகர்களிடம் வெறும் ₹7/ கிலோவிற்கு விற்கப்படுகிறது. ஆனால் அதே கிழங்கு வறுவலாக ( சிப்ஸ்) ஆக விற்கப்படும் போது ₹ 35/ 200 கிராமிற்கு அதாவது ₹175/ ஒரு கிலோவிற்கு விற்பனையாகிறது. இதனை போன்று அனைத்து விவசாய பொருட்களை விவசாயிகளே மதிப்புக் கூட்டி விற்பனை செய்தால் விவசாயிகளின் வருமானம் பல மடங்கு உயரும்.
இது போல் இன்னமும் பல கிராம தொழில் முனைவோர்களை இந்த தளத்தில் விரைவில் சந்திப்போம்.
Contact தொடர்புக்கு Treepurasun ட்ரீபூராசன் : 94 86 52 1937
email மின்னஞ்சல் : treepurasun@gmail.com
Come Let us build Village Centered Economy
வாருங்கள் நாம் கிராமங்களை மையமாக கொண்ட பொருளாதாரத்தை உருவாக்குவோம்